28 ஏர்வாடி மனநோயாளிகள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு மாற்றம்
ஏர்வாடி: ஏர்வாடி தீ வைப்புச் சம்பவத்தை தொடர்நது அங்கு தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்த 7 பெண்கள் உள்ளிட்ட 28 மனநோயாளிகளை, போலீசார் கைது செய்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மன நல மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
கடந்த 2001ல் ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்ஹா பகுதியில் நடந்த கோரமான தீ விபத்தில் 28 மனநோயாளிகள் பலியாயினர். இதையடுத்து தமிழக அரசு அங்கிருந்த தனியார் மனநல மருத்துவமனைகளை மூட உத்தரவிட்டது.
ஆனால், மனநோயாளிகள் ஏர்வாடிக்கு கொண்டு வரப்படுவதை தடுக்க முடியவில்லை. இங்கு கொண்டு வந்தால் குணமடைக்கூடும் என்ற நம்பிக்கையில் மனநோயாளிகளின் உறவினர்கள் அவர்களை இங்கு விட்டுச் சென்று விடுகின்றனர்.
இந்நிலையில் ஏர்வாடியில் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட ஹசீனா (27) என்ற மனநோயாளி, பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து ஹசீனா கைது செய்யப்பட்டார். இதைதொடர்ந்து அப்பகுதியில் ஆதரவற்ற நிலையில் சுற்றிக் கொண்டிருந்த 46 பேரைப் பிடித்து, தர்ஹா நிர்வாகத்திடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
இதில், 28 பேர் (அவர்களில் 7 பேர் பெண்கள்) மட்டும் மனநிலை பாதித்தவர்கள் என்பத் தெரியவந்தது. மற்றவர்கள் பிச்சைக்காரர்கள் என்பது விசாரணைக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார், 28 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட் அவர்களை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications