திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நடந்த கோர விபத்தில் 4 பேர் பலியானார்கள். லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் அருகே உள்ள காவல்சேரியில் லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவியும் சம்பவ இடத்திலே பலியானார்கள்.
அதன்பின்னர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதி ஆகியோர் மீது மோதியது. இவ்விருவரும் அதே இடத்தில் மரணமடைந்தனர். இந்த விபத்தில் மொத்தம் 4 பேர் பலியானர்கள். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications