காந்தி நினைவு நாள் - தலைவர்கள் அஞ்சலி
Subscribe to Oneindia Tamil

மகாத்மா காந்தியின் 61வது நினைவு நாள் இன்று தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி சென்னை கடற்கரையில் உள்ள மகாத்மாவின் சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு வைக்கப்பட்ட படத்திற்கு மாநில அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பரிதி இளம்வழுதி உள்ளி்ட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு நிதியமைச்சர் அன்பழகன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் தீண்டாமை எதிர்ப்பு உறுதிமொழியைச் சொல்ல அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் திரும்பக் கூறினர்.
இதேபோல டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திலும், நாடாளுமன்ற வளாகத்திலும் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications