தூத்துக்குடியி்ல் காங்கிரஸ் கொடிக்கம்ப பீடம் உடைப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியின் கொடிக் கம்ப பீடம் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி 16வது வார்டுக்குட்பட்ட குரூஸ்புரம் பூங்கா அருகே நகர காங்கிரஸ் சார்பில் முன்னாள் கவுன்சிலர் டென்சிங் நினைவு கொடிகம்பம் நேற்று முன்தினம் அமைக்கப்படடது.
19 அடி உயரம் கொண்ட அந்த புதிய இரும்பு கம்பத்தில் மகாத்மா காந்தியின் நினைவு நாளான இன்று கொடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் மர்ம நபர்கள் அந்த கொடிகம்ப பீடத்தை இடித்து சேதப்படுத்தி விட்டு கம்பத்தை எடுத்து சென்று விட்டனர்.
இதையறிந்த மாநில காங்கிரஸ் செயலாளர் ஏபிசிவி சண்முகம், நகர தலைவர் ராஜூ, இளைஞர் காங் துணை தலைவர் அருள்வாணன், முன்னாள் கவுன்சிலர் அருள் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் அந்தோணிசாமி, பாஸ்கர், விஜயா மற்றும் தொண்டர்கள் அங்கு திரண்டனர்.
கம்பத்தை சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து வடபாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி கொடிக்கம்ப பீடத்தை சேதப்படுத்தியவர்களை தேடி வருகின்றனர்.
கோஷ்டிப் பூசலே இதற்குக் காரணமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications