அண்ணன் செய்தது தியாகம் - அதை நினைத்து ஆறுதல் அடைகிறேன்: முத்துக்குமாரின் தங்கை
சென்னை: எனது அண்ணனின் மரணம் குடும்பத்திற்கு பேரிழப்புதான். ஆனால், அவர் செய்தது தியாகம் என்பதால் அதை நினைத்து ஆறுதல் அடைகிறோம் என முத்துக்குமாரின் தங்கை தமிழரசி கூறியுள்ளார்.
முத்துக்குமாரின் ஒரே தங்கை தமிழரசி. 24 வயதாகும் அவரது வீட்டில்தான் தங்கியிருந்தார் முத்துக்குமார். தமிழரசியின் கணவர் கற்குவேல். தமிழரசி தற்போது நிறை மாத கர்ப்பிணியாக உள்ளார்.
அண்ணனின் உயிர்த் தியாகம் தமிழரசியை வெகுவாக பாதித்துள்ளது. அழுதபடியே உள்ளார்.
தமிழரசியின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. சிறிய வாடகை வீட்டில்தான் அவர் வசித்து வருகிறார்.
அண்ணனை நினைத்தபடியே அழுதபடியும், சாப்பிடாமலும் இருக்கிறார் தமிழரசி. நிறைமாத கர்ப்பிணியாக அவர் இருப்பதால் அவரை உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் சமாதானப்படுத்தி அருகிலேயே இருந்து பார்த்து வருகின்றனர்.
வற்றாத கண்ணீருடன் தமிழரசி தனது குடும்பம் குறித்துக் கூறுகையில், எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கொழுவநல்லூர் என்ற கிராமம் ஆகும். அங்கிருந்து 10 வருடங்களுக்கு முன்பு பிழைப்புத் தேடி சென்னை வந்தோம். எனது தந்தை பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். அதிலுள்ள வருமானத்தை வைத்துத்தான் குடும்பம் நடந்து வந்தது.
இந்த நிலையில், எனது தாயார் உடல்நலமின்றி இறந்துவிட்டார். அதுமட்டுமல்ல எனது மற்றொரு சகோதரர் வசந்தகுமார் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விருகம்பாக்கத்தில் விபத்தில் இறந்துவிட்டார்.
தாயையும் இழந்து சகோதரரையும் இழந்து நாங்கள் வாடிக்கொண்டிருந்தோம். இந்த நிலையில், எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. என்னுடன்தான் எனது அண்ணன் முத்துக்குமார் தங்கியிருந்தான். சினிமா டைரக்டராக வேண்டும் என்று விரும்பினான். உதவி இயக்குனராகவும் ஒரு நாடகத்திற்கு பணியாற்றினான்.
அதன்பிறகு, ஒரு பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்தான். தினமும் காலையில் சென்றுவிட்டு இரவுதான் வீடு திரும்புவான். எல்லோரிடமும் அன்பாக இருப்பான். எனக்கு அம்மா இல்லாத குறையை எனது அண்ணன்தான் போக்கினான்.
சம்பவம் நடந்த அன்று அதிகாலை 5 மணிக்கே எழுந்துசென்று விட்டான். மதியம்தான் என்னுடைய அண்ணனின் போட்டோ கேட்டு ஒருவர் வந்தார். அதன் பிறகுதான் அவன் தீக்குளித்த விஷயம் தெரிந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கைகால் நடுங்கியது.
அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டேன். எப்படியும் பிழைத்துக் கொள்வான் என்று நினைத்தேன். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அவன் இறந்த செய்தி கேட்டு துடித்தேன். அவன் இழப்பு எங்கள் குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
எப்போதுமே தமிழர்கள், தமிழினம் என்றே தான் பேசிக்கொண்டிருப்பான். அவன் சிந்தனை கடல் போல பெரியது. எதையுமே சிறிய கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டான். அவனை இழந்தது எங்களுக்கு பெரிய இழப்பாக இருந்தாலும் தமிழர்களுக்காக தன் உயிரையே தியாகம் செய்ததை நினைத்து சற்று ஆறுதல் அடைகிறேன் என்றார் தமிழரசி.
முத்துக்குமாரின் தந்தை குமரேசனும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளார். மகனின் பிரேதம் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்கு அருகே அமர்ந்திருக்கிறார். அவருடன் உறவினர்களும் அங்கேயே அமர்ந்துள்ளனர்.
-
சிறுக சிறுக 25 சவரன் சேர்த்த விசுவாசி… சென்னை தி.நகரில் பிரபல தங்க நகைக்கடை அலறியது ஏன்?” -
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
ECR 2.0: சென்னையின் ‘மெகா’ முகம் மாறுகிறது! நந்தவனம் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை.. எல்லாமே மாறுது -
சென்னையில் கடும் சம்மருக்கு இடையே திடீர் பிங்க் வசந்தம்.. பூத்து குலுங்கும் மலர்கள்! எப்படி நடந்தது? -
ஏப்ரல் 18 வரை தமிழகத்தில் வெளுக்கப் போகும் மழை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்













Click it and Unblock the Notifications