தீக்குளிப்பை தடுக்க மத்திய அரசு அலுவலகங்களில் போலீஸ் குவிப்பு
சென்னை: முத்துக்குமார் தீக்குளித்ததைப் போன்று மேலும் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலக வளாகங்களில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சாஸ்திரி பவனில் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து உயிர் நீத்தார்.
இதையடுத்து சென்னையில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பாதுகாப்பை அதிகரிக்க மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
எழும்பூர் கென்னத் சந்தில் உள்ள தபால் அலுவலகம் மற்றும் அதன் அருகில் உள்ள இலங்கை சுற்றுலா விடுதி முன்பு பெண் போலீசார் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இவை தவிர சாஸ்திரிபவன், பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவன், அகில இந்திய வானொலி நிலையம், ரிசர்வ் வங்கி, தேனாம்பேட்டை அக்கவுண்ட் ஜெனரல் அலுவலகம் உள்பட பல மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதிகாப்பு போடப்பட்டு உள்ளது.
வன்முறையில் ஈடுபடுகிறவர்களை தடுப்பதற்காக போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுகிறவர்களை உடனடியாகக் கைது செய்யவும் போலீசாருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது












Click it and Unblock the Notifications