புதுவையிலும் பிப். 4ம் தேதி பொது வேலை நிறுத்தம்
புதுச்சேரி: தமிழகத்தைப் போலவே, பிப்ரவரி 4ம் தேதி புதுச்சேரியிலும் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்த இலங்கைத் தமிழர் பாதுகாபபு இயக்கம் முடிவு செய்துள்ளது.
இலங்கையில் போர் நிறுத்தம் அமலாக வேண்டும், இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி 4ம் தேதி தமிழகம் முழுவதும் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
தற்போது புதுவையிலும் அன்றைய தினம் பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என தமிழர் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் பா.ம.க., ம.திமு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாவாணன் தலைவர்
இக்கூட்டத்தில், தமிழகத்தைப்போல புதுவையிலும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக விடுதலை சிறுத்தை கட்சி அமைப்பு செயலாளர் பாவாணன் செயல்படுவார்.
- இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு அப்பாவி தமிழர்களின் உயிர்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தி நாளை மறுநாள் (புதன்கிழமை) தமிழகத்தைப் போல் புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது.
- தொழிலாளர்கள் சுய வேலை மறுப்பு போராட்டத்திலும், கடை உரிமையாளர்கள் கடை யடைப்பு போராட்டத்திலும், மீனவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் இலங்கை தமிழர்களை காத்திட முன்வர கேட்டுக் கொள்கிறோம்.
- இதே கோரிக்கையை முன்வைத்து வருகிற 7-ந்தேதி கறுப்புகொடி ஊர்வலம் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications