பாக். அவதூறை பொய்யாக்க கஸாப்பின் புதிய படம் வெளியீடு
மும்பை: மும்பை போலீஸ் பிடியில் உள்ள தீவிரவாதி முகம்மது கஸாப் இறந்து விட்டான் என்று கூறி வரும் பாகிஸ்தானின் கூற்றைப் பொய்யாக்கும் வகையில் அவனது புதிய படம் வெளியாகியுள்ளது.
தீவிரவாதி கஸாப் இறந்திருக்கலாம் என பாகிஸ்தான் மீடியாக்கள் கடந்த சில நாட்களாக செய்தி வெளியிட்டு வருகின்றன.
இதை மகாராஷ்டிர அரசு மறுத்திருந்தது. பாகிஸ்தான் அரசுக்கு கஸாப் உயிருடன் இருக்கிறானா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ள விருப்பம் இருந்தால் தூதரகத்திலிருந்து யாரையாவது அனுப்பி தெரிந்து கொள்ளலாம் எனவும் மகாராஷ்டிர அரசு கூறியிருந்தது.
இந்த நிலையில், கஸாப், விசாரணை அதிகாரி முன்பு அமர்ந்திருப்பதைப் போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
கையில் விலங்கிடப்பட்ட நிலையில் அமர்ந்திருக்கிறான் கஸாப். அவனுக்கு முன்பு ஒரு விசாரணை அதிகாரி அமர்ந்திருக்கிறார். மும்பை குற்றப் பிரிவு அலுவலகத்தில் இந்த விசாரணை நடந்தபோது இப்படம் எடுக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.
கஸாப்பின் இடது கையில் பேன்டேஜ் போடப்பட்டுள்ளது. இந்தப் படம் எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் 2 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் போலத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications