புலிகளை ஆதரித்துப் பேசுவதா? வக்கீல்களுக்கு காங்கிரஸ் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படும், பேசும் வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக அரசின் உள்துறைச் செயலாளரிடம் மனு தரப்படடுள்ளது.

காங்கிரஸ் எம்.பி.க்கள் கார்வேந்தன், ஆரூண், எம்.எல்.ஏ.க்கள் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் இதுதொடர்பாக கொடுத்துள்ள மனுவி,

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 6 நாட்களாக சில வக்கீல்கள், விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைவர் பிரபாகரனுக்கும் ஆதரவாக கூட்டம் போட்டு பேசி வருகின்றனர்.

கூட்டம் நடத்துவதற்கு உயர்நீதிமன் பதிவாளரின் அனுமதியை அவர்கள் பெறவில்லை. இவர்கள், பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி, முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு எதிராகவும், அவதூறாகவும்,பேசுகின்றனர்.

சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் என்ற பெயரில் சில வக்கீல்கள், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக கோர்ட்டு வளாகத்துக்குள் அவர்கள் கூட்டம், தர்ணா போன்றவற்றை நடத்துவதற்கும்,தேச விரோத செயலில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்க வேண்டும்.

கோர்ட்டுகளில் ஆஜராகும் வக்கீல்கள், மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என இன்று காலை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் தீர்மானித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+