கோவை சிறையில் ஆயுள் கைதி தற்கொலை!
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை சிறையில் ஆயுள் கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் வாழப்பாடி சந்திரவலசு பகுதியைச் சேர்ந்தவர் வடமாலை (29). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இவர் சிறையில் உள்ள சமலயறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த சிறைத்துறை அதிகாரிகள் வடமலையை சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் சிறைத்துறை நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications