இதய அறுவை சிகிச்சை - 110 குழந்தைகளுக்கு நாராயணி பீடம் நிதியுதவி!
வேலூர்: ஏழை குழந்தைகள் 110 பேரின் இருதய அறுவை சிகிச்சைக்காக ஸ்ரீ நாராயணி பீடத்தின் சார்பில் ரூ. 1.50 கோடியினை நாராயணி பீட நிறுவனர் சக்தி அம்மா முன்னிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வழங்கினார்.
ஸ்ரீ நாராயணி பீடத்தின் நிறுவனர் சக்தி அம்மாவின் 33வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆரோக்யா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 330 குழந்தைகளின் இருதய அறுவைச் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக 110 குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்காக நிதி வழங்கும் விழா நாராயணி பீடத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு நாராயணி பீட நிறுவனர் சக்தி அம்மா தலைமை வகித்தார். விழாவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு 110 குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ. 1.50 கோடி நிதியுதவி வழங்கினார்.
அப்போது, நாராயணி பீட நிறுவனர் சக்தி அம்மா பேசுகையில்,
ஒரு மனிதனுக்கு அமைதியும், ஆரோக்கியமும் கிடைக்கும் என்றால் அது ஆன்மீகத்தால் மட்டுமே முடியும். அவைகள் இந்து சமயத்தின் பக்தி மார்க்கத்தில் நிறையவே உள்ளது.
ஆன்மீகம் பற்றி மடங்கள் மட்டுமே பேசினால், அது ஒரு சிலரை மட்டுமே போய்ச் சேரும்.
சமுதாயத்தில் உள்ள அனைவரும் ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும். அதனை செய்ய அரசால் மட்டுமே முடியும். இதற்கு பள்ளி பாட திட்டத்தில் ஆன்மீகம் இடம் பெற வேண்டும் என்றார்.
-
தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட புதிய டேட்டா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications