தொடரும் இலங்கை கடற்படையின் வெறியாட்டம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துன்புறுத்தி வருவது வாடிக்கையாகிவிட்டது. நேற்றும் 30 படகிலிருந்த மீனவர்களை தாக்கி, அரைநிர்வாணமாக்கி அவர்களை கடலில் தள்ளிவிட்டு, தங்களது வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட படகுகளில் தமிழக வீரர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் ரோந்து படகுகளில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே வந்தனர்.
இதையடுத்து தமிழக மீனவர்கள் வேகமாக கரை திரும்பினார். ஆனால் விடாப்பிடியாக துரத்திய இலங்கை இனகொலை அரசின் கடற்படை 30க்கும் அதிகமான படகுகளில் வந்த மீனவர்களை சுற்றி வளைத்தது.
அதிலிருந்த மீனவர்களை துப்பாக்கியை மாற்றி பிடித்து தாக்கியுள்ளனர். தலையில் ஐஸ்கட்டியை வைத்தும், அடித்து உதைத்தும் சித்திரவதை செய்துள்ளனர். இதில் பல மீனவர்கள் காயமடைந்தனர். பின்னர் அவர்களை அரை நி்ர்வாணமாக்கி கடலுக்குள் தள்ளிவிட்டனர்.
அடுத்த முறை மீன்பிடிக்க கடலுக்கு வரக்கூடாது என மிரட்டினர். அவர்கள் சென்றவுடன் மீனவர்கள் படகில் ஏறி வீடு வந்து சேர்ந்தனர்.
இது குறித்து பாம்பன் மீனவர்கள் ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குனர் பன்னீர்செல்வத்திடம் புகார் செய்தனர். காயமடைந்த மீனவர்கள் கூறுகையில்,
மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் எங்களை நோக்கி சுட்டனர். கடலில் குதிக்கசெய்து சித்ரவதை செய்தனர். இருந்த நவீன கருவிகளை பறித்த கொண்டனர். அரைநிர்வாணப்படுத்தி நிற்க வைத்தனர். உயிர் மேல் இருந்த ஆசை காரணமாக மீன்பிடிக்காமல் கரை திரும்பினோம் என்றனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications