இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ தீர்வு சாத்தியமல்ல: ராஜ்நாத் சி்ங்
நாக்பூர்: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே சரியானதாக இருக்கும் என பாஜக கருத்து தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல் உத்திகள் மற்றும் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் நாக்பூரில் நேற்று தொடங்கியது.
இக்கூட்டத்திற்கு முன்பு பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,
இலங்கை பிரச்சினையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் படும் கஷ்டத்துக்கு அளவே இல்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்திய அரசு தீவிரவாத இயக்கமாக மட்டுமே பார்க்கிறது. ஆனால் இனப்பிரச்சினைக்கு ராணுவ ரீதியிலான தீர்வு சாத்தியமல்ல.
தற்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை கிட்டத்தட்ட 95 சதம் முடந்துவிட்டது. எனவே இனிமேலாவது இலங்கை அரசு அமைதித் தீர்வுக்கு வழி காண வேண்டும்.
1987ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய, இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் கீழ் அரசியல் தீ்ர்வு காண இலங்கை அரசு முயல வேண்டும்.
அதற்கு முதல்படியாக, அப்பாவித் தமிழர்களுக்கும், விடுதலைப் புலிளுக்கும் இடையிலான வித்தியாசத்தை அது உணர வேண்டும். அவர்களைப் பிரித்து பார்க்க முன்வர வேண்டும். போர் முனையில் சிக்கியுள்ள 3 லட்சம் தமிழர்களின் பாதுகாப்புக்கு இலங்கை அரசு உறுதி அளிக்க வேண்டும்.
அனைத்து தமிழ் அமைப்புகள், கட்சிகள் உள்ளிட்டவற்றுடன் இலங்கை அரசு அமைதித் தீர்வு குறித்து ஆலோசிக்க வேண்டும். என்றார் ராஜ்நாத் சிங்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications