தெற்காசியாவில் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது இந்தியா: ராஜா
டெல்லி: அமெரிக்காவுடன் சேர்ந்ததால், தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியா தனித்து விடப்பட்டுள்ளது. இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவின் பேச்ச மதிப்பதில்லை என்று கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் ராஜா.
டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இப்பிராந்தியத்தில் இந்தியா தனித்து விடப்பட்டுள்ளது. யாரும் இந்தியாவின் பேச்சைக் கேட்பதில்லை என்பது, சில மூத்த அமைச்ர்களின் அறி்க்கைகளிலிருந்து தெரிய வருகிறது.
தமிழர் பிரச்சினை தொடர்பாக இலங்கை சொல்வதை கேட்பதில்லை. மும்பைத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானும் இந்தியாவின் கோரிக்கைகளை மதிப்பதில்லை.
நமது அண்டை நாடு எதுவும் நம்மை மதிப்பதில்லை. நாம் தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம். அவமதிப்புக்குள்ளாகி வருகிறோம். இதற்கு காரணம் அமெரிக்காவுடன் நாம் நெருங்கியதுதான்.
நாம் சொல்வதை பாகிஸ்தான் மதிப்பதில்லை என்பதை பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரத்தின் பேச்சுக்கள், அறிக்கைகள் நிரூபிக்கின்றன.
இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவிகளைச் செய்கிறதா என்பதை காங்கிரஸ் அரசு அதை தெளிவாக அறிவிக்க வேண்டும். இலங்கைக்கு ஆயுதங்கள், ஆள் பலம் உள்ளிட்டவற்றை இந்தியா வழங்கி வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன. அவற்றுக்கு ஏன் இந்திய அரசு விளக்கம் தராமல் உள்ளது என்றார் ராஜா.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications