டெல்லி மூலமாகத்தான் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்: அன்பழகன்
சென்னை: இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமானால் மத்திய அரசை மட்டுமே நம்ப வேண்டும். மத்திய அரசால்தான் நிரந்தரத் தீர்வை காண முடியும் என்று தமிழக நிதியமைச்சர் க.அன்பழகன் கூறியுள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வலியுறுத்தி, திமுக தலைமையிலான இலங்கை தமிழர் நல உரிமைப் பேரவை சார்பில் சென்னையில் நேற்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
சென்னை ராயபுரம் அறிவகம் அருகில் இருந்து மாலை 5.10 மணிக்கு துவங்கியது. திமுக பொது செயலாளர் க.அன்பழகன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிடர் கழகம் உள்ளிட்டவற்றின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் சுதர்சனம், அமைச்சர் கே.பி.பி.சாமி, முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன் ஆகியோர் திறந்த ஜீப்பில் வந்தனர்.
பேரணியில் திரைப்பட பாதுகாப்பு கழகத் தலைவர் கே.ராஜன் மற்றும் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்களும் பங்கேற்றனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் இலங்கையில் போர் நிறுத்தம் கோரியும், ஈழத் தமிழர்களை காப்பாற்ற வலியுறுத்தியும் கோஷமிட்டார்கள்.
வண்ணாரப்பேட்டை, மின்ட் பாலம் வழியாக தங்க சாலை மணிகூண்டை மாலை 6.25 மணிக்கு வந்தடைந்தது. பேரணி முடிவில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வடசென்னை தி.மு.க. மாவட்ட செயலாளர் புரசை வி.எஸ்.பாபு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அன்பழகன் கூறுகையில்,
இலங்கை பிரச்சினையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றி விளக்குவதற்காக இந்த கூட்டம் நடக்கிறது. தமிழ் இனம் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவது மட்டுமே தான் ஒரே நோக்கம் என்றாலும் அதனை யார் செய்வது என்பதே கேள்வி? முதல்வர் கருணாநிதி உடனே போர் நிறுத்தம் செய்ய முடியுமா?
அதற்கான வழிமுறைகளை தேட வேண்டியது மத்திய அரசுதான். மத்திய அரசுதான் இலங்கை அரசை கட்டுப்படுத்த முடியும். தமிழ் இனத்தை காப்பாற்ற வேண்டியது இலங்கை அரசின் கடமை என்பதை மத்திய அரசு மூலமாகத்தான் நாம் உணர்த்த முடியும்.
எனவே, மத்திய அரசை விட்டால் இப்போதைக்கு வேறுவழி கிடையாது. இந்த பிரச்சினையின் தீர்வுக்கு மத்திய அரசு மூலம் செயல்படுவதுதான் ஒரேவழி. இந்தியா போன்ற பெரிய நாடு வலியுறுத்தும்போது அதனை இலங்கை அரசு அடியோடு புறக்கணிக்க முடியாது.
ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளும் வலியுறுத்துகின்றன. உலக நாடுகளும் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகின்றன.
இந்த பிரச்சினையில் ஏன் பதவி விலகவில்லை என்று கேட்கிறார்கள்? அப்படி நடந்து கொண்டு மத்தியில் ஆட்சி மாறினாலும் அந்த ஆட்சி ஈழத் தமிழர்களுக்கு அனுதாபம் காட்டுமா? முதல்வர் கருணாநிதிக்கு செல்வாக்கு இருக்குமா? மத்திய அரசை கவிழ்க்க துணை போய்விட்டால் அடுத்து நல்லதொரு அரசைப் பெற முடியும் என்பதில் நம்பிக்கை இல்லை.
இலங்கை பிரச்சினையில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.
எனவே, இந்த பிரச்சினையில் நியாயத்தை ஏற்றுக்கொண்டு ஈழத் தமிழர்களைக் காப்போம். அதற்காக அனைவரும் ஒன்றுபடுவோம் என்றார் அன்பழகன்.
ஒத்துழைப்பு தாருங்கள் .. தங்கபாலு
காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு பேசுகையில்,
இலங்கை தமிழர்களுக்காக காங்கிரசும், திமுகவும் பல முனைகளில் போராடி உள்ளன. இந்த பிரச்சினையில் தீர்வு காண்பதற்காக பலநேரங்களில் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
இலங்கை பிரச்சினைக்காக இப்போது குரல் கொடுக்கும் கட்சிகளே அப்போது கிடையாது. இலங்கைக்கு சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து ஆயுதம் சப்ளை செய்யப்படுகிறது.
தமிழர்களைக் கொல்வதற்காக இந்திய அரசு ஆயுதம் அனுப்பவில்லை என்பதை இந்த மேடையில் பட்டவர்த்தனமாக சொல்கிறேன்.
மத்திய, மாநில அரசுகளுடன் அனைவரும் ஒத்துழைத்தால்தான் தமிழனைக் காப்பாற்ற முடியும் என்றார்
ஆட்சி இருந்தால்தான் .. கி.வீரமணி
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசும்போது,
ஈழத் தமிழர் பிரச்சினைக்காக திமுக இரண்டு முறை ஆட்சியை இழந்தது. தெளிவான, உறுதியான ஆட்சி இருந்தால்தான் தமிழனின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படும். தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முதல்வர் கருணாநிதி தலைமையினால் மட்டுமே முடியும் என்பது வரலாற்று உண்மை.
அவரை விமர்சித்து வரலாற்றில் பழிசுமக்க வேண்டாம். என்ன விலை கொடுத்தும் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். அது, உணர்ச்சிப்பூர்வமானதாக இல்லாமல், அறிவுப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்றார்.
அரசியல் பிரசாரம் .. ஆர்.எம்.வீ.
எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பேசுகையில்,
இலங்கை ராணுவ வெறியர்களால் தாக்கி அழிக்கப்பட்டு கொண்டு இருக்கின்ற தமிழர்களை காப்பாற்ற வேண்டும்.
போரை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைப்பதற்காகவும், அப்படி நிறுத்தப்பட்ட போரின் விளைவாக அமைதி ஏற்படவும், தமிழர்கள் என்றைக்கும் வாழ்ந்திடவும், அதற்கான உரிமைகளை பெற்றிடும் திட்டங்களை வழங்குவதற்காகவும் இன்றைக்கும் நாடு முழுவதும் பிரசார கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஈழத்தமிழர்களுக்காக இப்போது சில பேர் அணிவகுத்து செல்கின்றனர். அவர்கள் இலங்கை அரசாங்கம் போரை நிறுத்த வேண்டும் என்று சொல்லவில்லை.
இந்திய அரசு போரை நிறுத்த வேண்டும் என்று சொல்லி அரசியல் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றனர் என்றார் ஆர்.எம்.வீரப்பன்.
-
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications