ராமேஸ்வரம் கடல் பகுதியில் போர் விமானங்கள், போர்க் கப்பல்கள் ரோந்து தீவிரம்
ராமேசுவரம்: இலங்கையில் சண்டை தீவிரமடைந்து வரும் நிலையில் ராமேஸ்வரம் கடல் பகுதியில் விடுதலைப் புலிகல் ஊடுறுவி விடாமல் தடுக்கும் வகையில் விமானப்படை விமானங்களும், போர்க் கப்பல்களும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அகதிகள் போர்வையில் புலிகள் ஊடுறுவலாம் என கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராமேசுவரம் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 4 போர்க்கப்பல்கள் 500-க்கும் மேற்பட்ட கமாண்டோ படைவீரர்களுடன் தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றன.
ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் என பாக்ஜலசந்தி கடல்பகுதியில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெப்பாகாத்தூன் போர்க்கப்பலும், ராணிஜிந்தன் போர்க்கப்பலும், இந்திய கடற்படைக்கு சொந்தமான டி.59 என்ற அதிநவீன போர் கப்பலும் ரோந்தில் ஈடுபட்டுள்ளன.
மன்னார்வளைகுடா கடல்பகுதியில் தூக்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்திய கடற்படை ஹெலிகாப்டர், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்றும் கடலில் தாழ்வாக பறந்து கண்காணித்து வருகிறது.
மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான தரையிலும் தண்ணீரிலும் அதிவேகமாக செல்லக்கூடிய 2 ஹோவர்கிராப்ட் ஐ.சி.181, 183 ஆகியவையும் 24 மணிநேரமும் கடலில் தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகின்றன.
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் அடையாள அட்டைகள், படகுகள் சோதனையிடப்பட்டு வருகின்றன. இதுதவிர கியூபிரிவு போலீசார் கடலோரபகுதியில் ரோந்து சென்று இலங்கையில் இருந்து யாரும் தப்பி வருகிறார்களா? இலங்கைக்கு பொருட்கள் எதுவும் கடத்தப்படுகிறதா? என்று கண்காணித்து விசாரணை நடத்தினர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications