தமிழர் வாழ்வில் பள்ளம் ஏற்படாமலிருக்க உள்ளம் தாங்கித்தானே ஆக வேண்டும்- கருணாநிதி

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை:
பத்துக்கு மேற்பட்ட டாக்டர்களின் மேற்பார்வையுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு, தாங்கொணா வலியுடன் வேதனைப்பட்டு கொண்டிருக்கும் நான் தொலைக்காட்சி செய்திகளில் இலங்கை தமிழர் உரிமைப் போர் குறித்து; நமது தமிழகத்தில் கட்சிகள் இரு பிரிவாக நின்று குரல் கொடுப்பதை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.
அந்த பேரணிகளிலும், கூட்டங்களிலும் நானும் கலந்துகொள்ள முடியாமல் உடல் நலிவுக்கு ஆளாகியிருக்கிறேனே என்ற கவலை என்னை வாட்டுவதை விட; நான் 2 நாளைக்கு முன்பு; ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே!'' என்ற தலைப்பில் எல்லா கட்சிகளிலும் உள்ள உடன்பிறப்புகளுக்கும் விடுவித்த வேண்டுகோளை அலட்சியப்படுத்தியது மட்டுமல்ல; பிறிதோர் அணியின் கூட்டங்களில் பேசியோரும், பேட்டி கொடுத்தோரும் என்னை மிக இழிவுபடுத்தித் தூற்றியிருக்கிறார்கள்.
அதனால் எனக்கு அணுவளவு வருத்தமும் இல்லை. அவர்கள் பேசுவது அவர்கள் மனச்சாட்சிக்கே சரியென்று பட்டால் அதில் எனக்கு மகிழ்ச்சி தான்.
என்னையும், இலங்கை தமிழர் நல உரிமைப் பேரவையில் உள்ள பல்வேறு கட்சிகளின் முன்னணியினரையும்; இப்படி ஒரு சிலர் தூற்றுகிறார்கள், மேடையில் நின்று நமது அணுகுமுறையை அசிங்கப்படுத்துகிறார்கள் என்பதற்காக, இந்தப் பேரவையில் உள்ள யாரும் அவர்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை; பதில் சொல்ல வேண்டாம் என்றும் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் - அண்ணாவின் அறிவுரை இது! இன்றைய நிலையில் என் உடல் தாங்குகிறதோ - இல்லையோ; உள்ளம் தாங்கித் தானே ஆக வேண்டும் - இலங்கை தமிழர் வாழ்வில் பள்ளம் ஏற்படாமலிருக்க என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications