ராமதாஸின் பேச்சு தமிழ் மக்களை ஏமாற்றும் மோசடி: ராசா

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற ஊர்வலத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா. பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தி.மு.க.வையும் முதல்வரையும் குறி வைத்து குறை சொல்லி தாக்கியிருக்கின்றனர்.
இதில் ராமதாஸின் உரையில் மறைந்திருக்கும் சூட்சுமம் அடங்கிய அரசியல் வெளிப்பாடு, இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வு என்பதைக் காட்டிலும் திருட்டுத்தனமாக தங்களின் இருப்பை நிலை நிறுத்தும் முயற்சியாகவும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற மோசடி வித்தையாகவும் அமைந்துள்ளது என்பதே உண்மையாகும்.
நானோ என் குடும்பத்தினரோ சட்டமன்றத்துக்கோ நாடாளுமன்றத்துக்கோ வர மாட்டோம் என்று சொன்னவர் ராமதாஸ். ஆனால் சொந்த மகனையே மத்திய அரசின் முக்கியத் துறைக்கு அமைச்சராக்கியுள்ளார்.
இந்த நிலையில் தி.மு.க.விடத்திலும் முதல்வரிடத்திலும் குழப்பத்தையும் முரண்பாட்டையும் காண்பதில் அவருக்கு நிகர் அவர்தான்.
பறித்த ஆயுதங்களை மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு எம்.ஜி.ஆர். வழங்கவில்லையா என ராமதாஸ் கேட்கிறார். இதையே சாரமாக வைத்து அவருடைய மகன் அன்புமணியின் மூலம் மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்புவாரா?
பிரபாகரனின் பேட்டியில் சர்வாதிகார ஆட்சி என்று குறிப்பிடவில்லை என்கிறார் ராமதாஸ். அவர் குறிப்பிடும் ஒற்றைக் கட்சி ஆட்சி முறைக்கும் சர்வாதிகார ஆட்சிக்கும் என்ன பெரிய அரசியல் பண்பியல் வேறுபாடு என்பதை விளக்குவாரா?
இலங்கையில் அமைதியான சுமுகமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துபவர் முதல்வர் கருணாநிதி. தி.மு.க.வும் முதல்வரும் தமிழீழம் அமைய வேண்டி நடத்திய போராட்டங்களும் பேசிய பேச்சுக்களும் அப்போது ஜாதி சங்கம் நடத்திக் கொண்டிருந்த "தமிழினப் போராளி'க்கு (?) தெரிய வாய்ப்பில்லை.
திருமாவளவன் பேசுவதுபோல் பெரியார் கேட்ட திராவிட நாட்டுக்கோ, அண்ணா கேட்ட தனித் தமிழ்நாட்டுக்கோ வேறு எந்த நாட்டிலும் ஆதரவு கேட்க வேண்டிய சூழல் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் பன்னாட்டு உறவுகளில் எத்தகைய தாக்கங்கள் இருந்திருக்கும் என்று இன்னமும் அனுமானிக்க முடியாதபோது அவற்றை இலங்கைப் பிரச்னையோடு ஒப்பிடுவது சரி அல்ல.
தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது என்று அதே மேடையில் தா. பாண்டியன் முதல்வரைச் சாடுவதாக நினைத்துக் கொண்டு பேசியுள்ளார். இது முதல்வருக்கோ அல்லது ஸ்டாலினுக்கோ பொருந்தாது.
தனக்கும், தன் மனைவி, மகன், மருமகள் உள்ளிட்ட உறவினர்களுக்குமே என்று ஜாடையாய் சொன்ன வாசகங்களை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாத ராமதாஸ், தெளிவு பற்றி முதல்வருக்குச் சொல்லித் தருவது வேடிக்கையாகும்.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றுபட வேண்டும் என்று முதல்வர் பேசுவதில் ரகசியம் உள்ளதாக வைகோ கூறுவதில் வருத்தம் ஏதும் இல்லை. ஏனெனில் தனித் தனியாகப் பேசினால்தான் ரகசியம்.
குழப்பத்துக்கும் தெளிவின்மைக்கும் ஒரு கூட்டணி அமைத்து அதற்குத் தலைமை வகிக்கும் ராமதாஸÝம் அவரது கூட்டாளிகளும் இலங்கைத் தமிழர் பிரச்னையை அணுகுகின்றனர் என்று கூறியுள்ளார் ராசா.
-
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
Election Exclusive: விஜய் + சசிகலா + ராமதாஸ்? தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பும் 3வது கூட்டணி? கணக்கு சரியா வருமா? -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன்












Click it and Unblock the Notifications