பட்டப்பகலில் ரவுடி கொலை; சேலத்தில் பயங்கரம்
சேலம்: சேலம் அருகே ஜாமினில் வெளி வந்த ரவுடி ஒருவன் பட்டப்பகலில் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சுக்கம்பட்டியை சேர்ந்த விஜய கண்ணன் என்பவர் பல திருட்டு மற்றும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர். அவர் தற்போது தனது இரண்டாவது மனைவி சர்மிளாவுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பஸ் மீது கல்வீசியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நிபந்தனை ஜாமினில் வெளியில் வந்தார். தினமும் வீராணம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கையெழுத்திட்டு வருவார்.
நேற்றும் வழக்கம் போல் கையெழுத்திட தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வலசையூர் பிரிவு அருகே 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்தது.
இதையடுத்து மிரண்டு போன அவர் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பியோட முயன்றார். ஆனால் அக்கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த விஜய கண்ணன் சம்பவ இடத்திலே துடிதுடித்து இறந்தார்.
நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் அப்பகுதியில் வாரசந்தைக்கு மக்கள் கூட்டமாக வந்து போய் கொண்டிருந்தனர். ஜன நெருக்கடி மிகுந்த பகுதியில் சினிமா பாணியில் ரவுடி ஒருவன் வெட்டி படுகொலை செய்யப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று கொலையாளிகளையும் தேடி வருகிறார்கள். அவரது இரண்டாவது மனைவி சர்மிளாவையும் விசாரித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications