திமுக அரசைக் கலைக்கத் துடிப்பவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: ஸ்டாலின்
திருவள்ளூர்: அரசியல் பிழைப்பு நடத்தும் அனாதை தலைவர்கள் சிலர் தி.மு.க. ஆட்சியை அகற்ற திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசை கலைக்க துடிப்பவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவள்ளூரில், இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், இலங்கை பிரச்சினைக்கு ஜனநாயக முறையில் தீர்வு காண கோரியும் இலங்கை தமிழர் நல உரிமை பேரவை சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஆயில் மில் அருகில் இருந்து பிரம்மாண்ட பேரணி தொடங்கியது. இதனை தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவாஜி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அமைச்சர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில், உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-
இலங்கை பிரச்சினையில் 2 கால கட்டங்கள் உள்ளன. கி.மு. மற்றும் கி.பி. என்பது போல் ராஜீவ் காந்திக்கு முன்பு ராஜீவ் காந்திக்கு பின்பு என்று ஒரு காலகட்டம் ஏற்பட்டு விட்டது. ராஜீவ் காந்தி மடும் கொலை செய்யப்படாமல் இருந்திருந்தால் இந்த இலங்கை பிரச்சினை என்றோ தீர்ந்திருக்கும்.
1989-ல் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் கருணாநிதி டெல்லியில் சந்தித்தார். அப்போது ராஜீவ் காந்தி, தாங்கள் 2 நாட்கள் தங்கியிருக்க முடியுமா என்று கேட்டார். அப்போது முரசொலி மாறனும் உடன் இருந்தார்.
இலங்கை பிரச்சினையில் தீர்வு காண முடியுமானால் அது தமிழக முதல்வர் கருணாநிதியால்தான் முடியும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தங்களுக்கு செய்வேன் என்று கூறிய ராஜீவ்காந்தி, மறுநாள் காலை வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங்கை சந்திக்க ஏற்பாடு செய்தார்.
அவர்கள் இரண்டரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்காக கருணாநிதியை இலங்கைக்கு சென்று வருமாறும், அதற்கு என்ன தேவையோ அத்தனையும் செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார்.
அதனை ஏற்றுக்கொண்டு மறுநாள், சென்னை விமான நிலையத்திற்கு வந்த கருணாநிதியிடம், ஒரு கசப்பான தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது கோபாலசாமி எம்.பி., கள்ளத்தோணி ஏறி இலங்கை வவுனியா காட்டிற்கு சென்று பிரபாகரனை சந்தித்தார் என்பதுதான் அந்த செய்தி.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் கள்ளத்தோணி ஏறி இலங்கைக்கு சென்ற அதிர்ச்சியான தகவலை கேள்விப்பட்டதை ராஜீவ்காந்தியிடம் வருத்தத்துடன் தெரிவித்தார். அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் ஒரு உறுப்பினர் கோபால்சாமி, இலங்கைக்கு சென்றது பற்றி பிரச்சினை எழுப்பினார்.
அப்போதுகூட ராஜீவ்காந்தி பெருந்தன்மையாக இலங்கைக்கு சென்றவர் பத்திரமாக திரும்பிவரவேண்டும் என்று விரும்புவதாக கூறினார். அதன் பின்பும் நீங்கள் முயற்சி செய்தால், இலங்கையில் தமிழர்கள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியும். முயற்சி செய்யுங்கள் என்று ராஜீவ் காந்தி கருணாநிதியிடம் கேட்டுக்கொண்டார்.
அவர் முயற்சி செய்ய சொன்ன பிறகுதான், நமது தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ரத்தம் சிந்தி கொலையானார். அதனால்தான் இலங்கை பிரச்சினை ராஜீவ்காந்திக்கு முன்பு, ராஜீவ்காந்திக்கு பின்பு என்று ஆனது. ராஜீவ்காந்தி உயிருடன் இருந்திருந்தால், இலங்கை பிரச்சினை எப்போதோ சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டிருக்கும்.
இருப்பினும் தொடர்ந்து இன்று வரை இலங்கை பிரச்சினைக்கு தீர்வு கண்டு தமிழர்களை காக்க வேண்டும் என்று தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் அனைத்தும் பாடுபட்டு வருகின்றன.
அனாதை தலைவர்கள்
இந்நிலையில் அரசியல் பிழைப்பு நடத்தும் அனாதை தலைவர்கள் சிலர் தி.மு.க. ஆட்சியை அகற்ற திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு கட்சியோடு சேர்ந்து கொண்டு ஆட்சியைப் பிடிக்கலாம் என்று திட்டம் தீட்டுவோர்களையெல்லாம் மக்களுக்கு நன்கு தெரியும்.
தொடர்ந்து தமிழக மக்களுக்கு நல்லாட்சி நடத்தி வரும் தி.மு.க. அரசை கலைக்க துடிப்பவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றார் ஸ்டாலின்.
-
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
சட்டசபை தேர்தலில் போட்டியிட கனிமொழி ஆர்வம்.. எந்த தொகுதி? ஸ்டாலின் கையில் முடிவு -
அரைக் கிணறை தாண்டிய அறிவாலயம்.. அடம் பிடித்த கட்சிகளை கூட்டணியில் அடைத்த திமுக! யாருக்கு எவ்வளவு? -
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்! -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
கூடுதல் தொகுதிகள்.. கறார் கம்யூனிஸ்ட்.. அதிர்ச்சியில் அறிவாலயம்.. தொடரும் இழுபறி -
ஆரம்பிக்கலாங்களா.. திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணலை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின் -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக்












Click it and Unblock the Notifications