20,000 வேலை காலி: அதிர்ச்சி தரும் அர்னால்டு

42 பில்லியன் டாலர் பற்றாக்குறையில் தவிக்கிறது அர்னால்டு ஷ்வார்ஸ்நேக்கர் தலைமையிலான கலிபோர்னியா மாகாண அரசு.
இந்த வார இறுதிக்குள் இந்தப் பற்றாக்குறையைச் சரிகட்டியாக வேண்டுமாம். அப்படி முடியாவிட்டால் 20000 பணியாளர்களை வேலையிலிருந்து நிறுத்தப் போவதாக எச்சரித்துள்ளார் அந்த மாகாணத்தின் கவர்னர் அர்னால்டு ஷ்வார்ஸ்நேக்கர்.
கடந்த டிசம்பரில் கலிபோர்னியாவில் நிதி நெருக்கடியை அறிவித்தார் அர்னால்டு. கூடவே வேலை இழப்புகள் குறித்தும் தெளிவாகக் கூறிவிட்டார். ஆனால் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைய வேண்டும் என வற்புறுத்தி வருகிறார்கள் எதிர்கட்சியினர்.
இந்த நெருக்கடியிலிருந்து இப்போதைக்கு வெளிவருவது சிரமம்தான் என்றும், எனது கடைசி முயற்சிகள் பலனளிக்காமல் போனால், 20 ஆயிரம் பணியாளர்கள் வேலை இழந்தே தீர வேண்டும் என்றும் அர்னால்டு கூறியுள்ளார்.
ஏற்கனவே கலிபோர்னியா மாகாண அரசில் பணியாற்றும் பல ஊழியர்களும் ஒப்பந்த அடிப்படையில்தான் பணியில் உள்ளனர். எந்த நேரத்திலும் வேலை இழப்புக்கு ஆளாக வேண்டிய சூழல் அவர்களுக்கு. கலிபேர்னியாவின் பொருளாதாரமும் கவலைக்குரிய நிலைக்குப் போய்விட்டது. எனவே 70 சதவிகித மக்கள், அர்னால்டுக்கு எதிரான மனப்போக்கில் உள்ளதாக மீடியா தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications