தீக்குளிப்போருக்கு நிதியுதவி இல்லை-அரசு
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக உயிர் துறப்போரின் குடும்பத்தினருக்கு இனி நிதியுதவி அளிப்பதில்லை என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக முதன் முதலில் சென்னையில் இளைஞர் முத்துக்குமார் தீக்குளித்து உயிர் நீத்தார்.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி, சீர்காழியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், சென்னையைச் சேர்ந்த அமரேசன் ஆகியோர் தீக்குளித்து உயிர் நீத்தனர்.
இவர்களில் ரவி, அமரேசன் ஆகியோர் தற்கொலை குறித்து சர்ச்சை இருந்தது.
முத்துக்குமார் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் நிதியுதவியை அறிவித்தது. ஆனால் அதை அவரது குடும்பத்தினர் நிராகரித்து விட்டனர்.
இந்த நிலையில் தீக்குளித்து இறந்த மற்றவர்களுக்கும், இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை பேரணியில் கலந்து கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மன்னை பாண்டியன் குடும்பத்திற்கோ தமிழக அரசு நிதியுதவி எதையும் அறிவிக்கவில்லை.
அவ்வாறு செய்தால், தற்கொலை செய்வதை ஊக்கப்படுத்துவது போல் ஆகிவிடும் என தமிழக அரசு கருதுவதால், நிவாரண நிதி அறிவிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications