ஈவ் டீசிங் தற்கொலை-2 மாணவர்களுக்கு சிறை
தி்ருச்சி: திருச்சி அருகே ஈவ்-டீசிங் செய்து மாணவியின் தற்கொலைக்கு காரணமான 2 மாணவர்களுக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருச்சி, புத்தூர் சாலை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த நல்லதுரை-காளீஸ்வரி தம்பதியின் மகள் விஜயசாந்தி (18). இவர் உறையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
நல்லதுரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இருப்பினும் காளீஸ்வரி தனது மகளை தொடர்ந்து படிக்க வைத்துள்ளார்.
இந் நிலையில் புத்தூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் விஜயசாந்தியை கேலி கிண்டல் செய்ததோடு அவரிடம் ஆபாசமாகவும் பேசியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி இரவு விஜயசாந்தி வீட்டு முன்பு வந்து மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த விஜயசாந்தி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ் விசாரணையில் மணி (21), சுரேஷ் சங்கர் (22) ஆகிய இருவர் தான் விஜய்சாந்தியின் தற்கொலைக்குக் காரணம் எனத் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பெருமாள் குற்றம் சாட்டப்பட்ட மணி, சுரேஷ் சங்கர் இருவருக்கும் தலா 3 வருட சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications