போர் நிறுத்தம்: பிரதீபா பேச்சு-கருணாநிதி மகிழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கூட்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் வலியுறுத்தியிருப்பது ஆறுதலாக இருப்பதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் இன்று உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், தனது உரையில், இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும், பிரச்சினைக்கு அமைதியான முறையில் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இது, மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப்பிறகு மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வரும் எனக்கு மிகுந்த ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தருவதாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் முதல்வர்.












Click it and Unblock the Notifications