காதலர் தினத்துக்கு எதிர்ப்பு-முத்தாலிக் கைது
பெங்களூர்: நாட்டின் பண்பாட்டை கட்டிக் காப்பதாகக் கூறிக் கொண்டு நாளை காதலர் தினத்தைத் தடுப்போம், காதலர்களை தாக்குவோம் என மிரட்டல் விடுத்த ஸ்ரீராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தாலிக் இன்று மங்களூரில் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநில பாஜக அரசுக்கு மிக நெருக்கமான அவர் நாளை மாலையே விடுவிக்கப்பட்டு விடுவார் என்று தெரிகிறது.
பெங்களூருக்கு மட்டும் விதிவிலக்கு...:
முன்னதாக காதலர் தினத்தன்று பெங்களூரில் நகரில் காதலர்கள் யாரையும் நாங்கள் தொந்தரவு செய்ய மாட்டோம். அதே சமயம், கர்நாடகத்தின் பிற நகரங்களில் எங்களது தொண்டர்கள் காதல் ஜோடிகளைப் பிடித்து போலீஸாரிடமோ அல்லது பெற்றோரிடமோ ஒப்படைப்பார்கள் என்று நேற்று நிருபர்களிடம் முத்தலிக் கூறியிருந்தார்.
அவர் முத்தலிக் கூறுகையில், பெங்களூர் நகரில் காதலர் தினக் கொண்டாட்டங்களை தடுத்து நிறுத்தும் எங்களது திட்டத்தை விட்டு விட்டோம்.
காதலர்களைப் பிடித்து அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம் என தெரிவித்திருந்தோம். இருப்பினும் பெங்களூரில் அதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டோம்.
இருப்பினும் திட்டமிட்டபடி மங்களூர், பெல்காம் உள்ளிட்ட மாநிலத்தின் பிற நகரங்களில் எங்களது தொண்டர்கள் செயல்படுவார்கள்.
பெங்களூரில் உள்ள சில தீய சக்திகள், எங்களது அமைப்பின் பெயரைக் கெடுக்கும் வகையில் செயல்படக் காத்துள்ளனர். எனவேதான் பெங்களூர் நகரில் எங்களது திட்டத்தைக் கைவிட்டுள்ளோம்.
காதலர் தினத்தை நாங்கள் எதிர்த்து வருவது சரியானதுதான். எங்களது நோக்கம் நிறைவேறியுள்ளது. சில கல்லூரிகள் எங்களது கல்லூரி வளாகத்தில் காதலர் தின கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாது என கடிதம் மூலம் உறுதியளித்துள்ளனர்.
அதேபோல சில ஹோட்டல்களும் கூட காதலர் தின கொண்டாட்டம் இடம் பெறாது என அறிவித்துள்ளன. இது எங்களுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றார் முத்தலிக்.
பெங்களூரில் இந்த அமைப்பினர் தாக்கினால் அவர்களைத் திருப்பித் தாக்க பல அமைப்புகள் தயாராகி வந்தன. இதனால் தான் முத்தாலிக் பெங்களூரில் எந்தப் பிரச்சனையும் செய்வதில்லை எனற முடிவுக்கு வந்திருந்தார்.
ஆனாலும் பிற பகுதிகளில் இவரது அடியாள் கும்பல் தாக்குதலை நடத்தும் என்பதால் அவரை முன்னெச்சரிக்கையாக இன்று அரசு கைது செய்துள்ளது.
தொடர்பான செய்திகள்:
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications