மருமகளை எரித்து கொல்ல முயன்ற மாமனார், மாமியார் கைது
நெல்லை: நெல்லையில் வரதட்சணை கேட்டு மருமகளை துன்புறுத்திய மாமனார், மாமியார் அவரை தீவைத்து கொல்ல முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள தருவை செக்கடி தெருவை சேர்ந்த மந்திரி மனைவி ராணி. இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டாகிறது. இந்நிலையில் மாமியார் ராஜம்மாள், மாமனார் கணபதி ஆகியோர் ராணியிடம் வரதட்சனை கேட்டு கொடு்மைப்படுத்தியதாக தெரிகிறது.
இதற்கிடையே நேற்று ராணி வீட்டில் உடல் முழுவதும் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே கணவர் மந்திரி மற்றும் அக்கம்பக்கத்தினர் மீ்ட்டு அவரை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரது நிலைமை கவலைகிடமாக உள்ளது. ராணி மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த மரண வாக்குமூலத்தில் மாமனார், மாமியார் ஆகியோர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்ததாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி ராஜம்மாள், கணபதி ஆகியோரை கைது செய்தனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications