நாளை தமிழக பட்ஜெட்- அன்பழகன் தாக்கல்
சென்னை: தமிழக அரசின் 2009-10ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் அன்பழகன் நாளை தாக்கல் செய்ய இருக்கிறார்.
கடந்த மாதம் ஜனவரி 21ம் தேதி தமிழக சட்டசபை, ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் உரையுடன் துவங்கியது. இதன் மீதான விவாதம் மற்றும் கூட்டத் தொடர் ஒரு வாரம் நடைபெற்றது.
இந்நிலையில் அடுத்த கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் க.அன்பழகன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.
வழக்கமாக தமிழக பட்ஜெட் மார்ச் 20ம் தேதிக்கு பிறகு தான் தாக்கல் செய்யப்படும். ஆனால் இம்முறை நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் இறுதியில் நடைபெற இருப்பதால் சட்டசபை முன்னதாக கூட்டப்பட்டுள்ளது.
தேர்தல் காரணமாக தமிழக பட்ஜெட்டிலும் பல சலுகைகள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இடம்பெறலாம்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், சட்டசபை அலுவலக ஆய்வு குழு கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. அப்போது இந்தாண்டு சட்டசபை நடைபெறும் நாட்கள் முடிவு செய்யப்படும். அதன்பின் பட்ஜெட் மீது விவாதம் நடைபெறும். அதற்கு அன்பழகன் பதில் அளிப்பார் என தெரிகிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications