ராஜபக்சேவின் ஆலோசகர் பதவியை நாராயணமூர்த்தி ஏற்கக் கூடாது: கர்நாடக வன்னியர்கள்
பெங்களூர்: இலங்கை அதிபரின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பதவியை, தமிழர் பிரச்சினை தீரும் வரை நாராயணமூர்த்தி ஏற்கக் கூடாது என கர்நாடக வன்னியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில சம்பு மகர்ஷி வன்னியர் சங்கதலைவர் மகாலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் போராடி வருகிறார்கள். வாழ்வுரிமைக்காக போராடும் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டன குரல் எழுந்து வருகிறது. அயல் நாடுகளில் வாழும் தமிழர்களும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை அதிபரின் ஐ.டி. ஆலோசகராக இன்போசிஸ் தலைவர் என்.ஆர்.நாராயணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறை சம்பவங்கள் குறித்து இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி நன்கு அறிந்திருப்பார் என்று கருதுகிறோம்.
இலங்கை தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு, அங்கு பிரச்னை தீரும் வரை அந்நாட்டு அதிபரின் ஐ.டி. ஆலோசகர் பொறுப்பு ஏற்பதை நாராயணமூர்த்தி சில காலம் ஒத்திவைக்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வுகாணும் வரை ஆலோசகர் பொறுப்பை ஏற்கமாட்டேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications