பெண்ணை கொல்ல முயன்ற கடற்படை அதிகாரி
மும்பை: சக ஊழியரின் மனைவியை கத்தியால் 11 முறை குத்தி கொடூரமாக கொல்ல முயன்ற வழக்கில் கப்பற்படை அதிகாரி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையில் உள்ள இந்திய கப்பற்படையில் ரேடியோ அதிகாரியாக இருந்து வருபவர் ஆர்ஏ சந்திரன். இவர் கோலபா என்னும் பகுதியில் உள்ள நேவி நகரில் வசித்து வருகிறார்.
அவரது பிளாட்டுக்கு அருகில் வசித்து வருபவர் தாரம்பால் ரவத். இவரும் கப்பற்படையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனிதா. இவர்களது குழந்தையும், சந்திரனின் குழந்தையும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர்.
இதையடுத்து அனிதாவை சந்திரன் அடிக்கடி பள்ளியில் சந்தித்துள்ளார். அடுத்தவரின் மனைவி என்பதையும் மீறி சந்திரன் அவர் மீது காதல் வயப்பட்டுள்ளார். ஒரு நாள் சந்திரன் தனது காதலை அனிதாவிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அனிதா அதை கடுமையாக கண்டித்துள்ளார்.
இந்நிலையில் சந்திரன், ரவத் இல்லாத சமயத்தில் அவரது பிளாட்டுக்குள் ஏறி குதித்து, பால்கனி வழியாக அனிதாவின் அறைக்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த அனிதாவை வெறித்தனமாக கத்தியால் 11 முறை குத்தினார். பின்னர் தனது கையையும் கத்தியால் கீறிக் கொண்டார்.
அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிதாவை அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனாலும், அவரது உடல்நிலை இன்னும் மோசமான கட்டத்தை தாண்டவில்லை.
போலீசார் சந்திரன் மீது கொலை முயற்சி, பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டது, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது என மூன்று வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தாம்பிரே கூறுகையில், கடந்த 13ம் தேதி சந்திரன், ரவத் மனைவியிடம் தனியாக பேச வேண்டும் வெளியே வா என அழைத்திருக்கிறார். இதையறிந்த ரவத் அவரை அந்த இடத்தில் இருந்து துரத்தி அடித்துள்ளார். இதனால் சந்திரன், அனிதாவை கொடூரமாக கொல்ல முயன்றுள்ளார் என்றார்.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications