ஜப்பானை உலுக்கிய பூகம்பம்
ஜப்பானில் நேற்று காலை 6.0 ரிக்டர் அளவு கொண்ட பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ளது இவடே மாகாணம். நேற்று காலை 6.24 மணிக்கு இப்பகுதியில் திடீரென கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் அது 6.0வாக பதிவானது.
இந்த பூகம்பத்தின் மைய பகுதி இவடே மாகாணத்துக்கு அருகில் கடலுக்கு அடியில் 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட போதிலும் சுனாமி வருவதற்கான வாய்ப்பு எதுவுமில்லை என அறிவிக்கப்பட்டது.
இந்த பூகம்பத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஜப்பானின் தென் கிழக்கு பகுதியான ஆமோரி பகுதியில் அதிகம் உணரப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இது தவிர்த்து இவாடே மாகாணத்துக்கு அருகில் உள்ள மியாகி, டொசிகி, யாமகடா ஆகிய பகுதிகளும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications