ரயில்வே பாலம் இடிந்து 3 பேர் பலி - லாலு மீது கொலை வழக்கு
முசாபர்பூர்: ரயில்வே பாலம் இடிந்து விழுந்து 3 பேர் பலியானது தொடர்பாக மத்திய் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மீது கொலை வழக்கு பதிவு செய்யும்படி முசாபர்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூரில் ரயில்வே பாலம் கட்டும் வேலை நடந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்த போது, பாலத்தின் தூண் இடிந்து விழுந்து 3 பேர் பலியானார்கள்.
முசாபபூரை சேர்ந்த வக்கீல் சுதிர்குமார் ஓஜா என்பவரும் காயமடைந்தார். இந்நிலையில் ஓஜா முசாபர்பூர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,
ரயில்வை பாலம் தானாக இடிந்து விழவில்லை. நான் வரும்போது இடிந்து விழும் வகையில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் சதி செய்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி லாலு பிரசாத் வந்த ஹெலிகாப்டர் ஒன்று பொது மக்களி்ன் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் இறங்கியது. இதை கண்டித்து நான் அவர் மீது வழக்கு தொடுத்தேன்.
இந்த வழக்கை வாபஸ் வாங்குமாறு எனக்கு பலமுறை மிரட்டல் விடுவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு நான் மசியவில்லை என்பதால் என்னை கொல்ல அவர் முயற்சித்துள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக நான் லேசான காயத்துடன் உயிர் தப்பினேன். ஆனால், அந்த பக்கமாக சென்ற மூவர் பலியாகிவிட்டனர்.
இது தொடர்பாக போலீசிடம் புகார் கொடுக்க சென்றேன். ஆனால் அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர் என மனுவில் கூறியுள்ளார்.
இதையடுத்து நீதிபதி ஜோதீந்திர குமார் சின்ஹா தனது உத்தரவில்,
லாலு பிரசாத் உள்பட 6 பேர் மீதும் கொலை, கொலை முயற்சி மற்றும் மிரட்டல் வழக்கை மொகமதுபூர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் நகலை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றார் நீதிபதி.












Click it and Unblock the Notifications