கைதிகளுக்கு தலைவரைத் தேர்வு செய்ய தேர்தல்: டிஜிபி நட்ராஜ்
சேலம்: தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தேர்தல் நடத்தி அவர்களில் ஒருவரை தலைவராக தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படும் என்று சிறைத்துறை டிஜிபி நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், போன்ற பல்வேறு முக்கிய இடங்களில் 9 மத்திய சிறைகள் உள்ளன. இந்த சிறைச்சாலைகளில் தண்டனைக் கைதிகள் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் உள்ளனர்.
இவர்களை நல்வழிப் படுத்தும் நோக்கில் தமிழக அரசு கைதிகளுக்கு பல்வேறு நல திட்டங்களை அறிவித்துள்ளது.
இது குறித்து சிறைத்துறை டிஜிபி நட்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், பஞ்சாயத்து முறையைப் போன்று தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைச் சாலைகளில் உள்ள கைதிகளின் குறைகளை போக்கும் விதத்தில் அவர்களுக்கு தேர்தல் நடத்தப்படும்.
தேர்தலில் கைதிகளில் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்படுவார். அவர் சிறைச்சாலைகளில் உள்ள நிறை, குறைகளை சிறைத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிப்பார்.
அதன் மூலம் கைதிகளின் குறைகள் கண்டறியப்பட்டு, அதை நிவர்த்தி செய்யப்படும்.
கைதிகளுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications