நெல்லை: 21ல் ஆறுகள் இணைப்பு திட்டம் துவக்கம்
நெல்லை: தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு ஆகிய மூன்று ஆறுகளையும் இணைக்கும் திட்டம் ரூ. 369 கோடி செலவில் வரும் 21ம் தேதி தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனால் துவக்கப்பட இருக்கிறது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் பாசன தேவையை நிறைவு செய்வது பாபநாசம் அணையாகும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 143 அடி கொள்ளளவுடன் அமைந்துள்ள இந்த அணையின் மூலமாக இரண்டு மாவட்டங்களிலும் 86 ஆயிரத்து 107 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெருகின்றன.
ஆண்டுதோறும் மழைக்காலங்களில் போதிய மழை பெய்து பாபநாசம் அணை நிரம்பிய போதிலும் லட்சகணக்கான கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றின் வழியாக கடலுக்கு சென்று விடுகிறது.
எனவே வெள்ளக்காலங்களில் கடலுக்கு செல்லும் உபரி நீரை வறட்சி பகுதிகளான ராதாபுரம், சாத்தான்குளம் தாலுகா பகுதிகளுக்கு திருப்பி விட வேண்டும் என்று இரண்டு மாவட்ட மக்களும் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்பு திட்டத்திற்கு தமிழக அரசு செயல்வடிவம் கொடுத்து இத்திட்டத்திற்கு ரூ.369 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட உள்ளது.
இத்திட்டத்தை கடந்த பிப் 8ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இந்த திட்டத்தை துவக்கி வைக்கிறார்.
இதற்கான விழா வரும் 21ம் தேதி பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வாளகத்தில் நடக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications