விடுமுறை-ஈடுகட்ட சனி-ஞாயிறு கல்லூரி உண்டு
சென்னை: இலங்கை தமிழர் போராட்டத்தை அடுத்து தமிழக கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன. இதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும் கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் பலியாவதை தடுக்க தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன.
மாணவர்கள் தங்கும் விடுதிகள் மூடப்பட்டு, அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் மூடப்பட்ட கல்லூரிகள் மீண்டும் 9ம் தேதி முதல் ஒன்றன்பின் ஒன்றாக திறக்கப்பட்டது.
இதனால் இரண்டு வாரங்களுக்கு மேல் பாடங்கள் நடத்த முடியாமல் போய்விட்டது. இதையடுத்து ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் வைத்து பாடங்களை வேகமாக நடத்துகின்றனர்.
சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள சில துறைகளில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களிலும் வகுப்பு நடக்கிறது. அந்த நாட்களில் செய்முறை தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இதே போல அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் செய்முறை தேர்வுகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புகள் ஏப்ரல் மாதம் வரை விடுமுறை நாட்களான சனி, ஞாயிறுகளில் தொடரும் என தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications