ஜனாதிபதி ஆட்சி வேண்டுமாம்-சு.சுவாமி சொல்கிறார்

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் தீட்சிதர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வரும் சுவாமிக்கு சமீபத்தில் சென்னை உயர்நீதி்மன்றத்தில், நீதிபதிகள் முன்னிலையில் அடி உதை விழுந்தது. அவரை ஜாதிரீதியாக திட்டியவாரே, கோர்ட் ஹாலை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு அடித்து உதைத்தனர் வழக்கறிஞர்கள்.
இந் நிலையில் மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் முன்னிலையில் நான் தாக்கப்பட்டேன். என் மீது அழுகிய முட்டைகளையும் வீசினார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஆட்சி நடத்த திமுக அரசு தவறிவிட்டது.
இதனால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர வேண்டும். நான் தாக்கப்பட்டதை நேரில் பார்த்த நீதிபதிகள் மத்திய அரசுக்கு இது தொடர்பாக செய்ய வேண்டிய வழிமுறைகளை பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
உயர் நீதிமன்றத்தில் வைத்து நான் தாக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்தன என்பது குறித்து உச்ச நீதிமன்றம் அவர்களிடம் கேட்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட 25 வக்கீல்களையும் கைது செய்ய வேண்டும். அவர்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும்.
விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் பாமக, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அதன்மூலம் ஒரு தமிழர் பிரதமராவதற்கு வாய்ப்பு உள்ளது என்றார் சுப்பிரமணியம் சுவாமி.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications