தலைமை நீதிபதியை அடையாளம் தெரியாததால் விரட்டிய போலீஸார் - ஓடி தப்பினார்
சென்னை: போலீஸாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே நடந்து வந்த மோதலைத் தடுப்பதற்காக வந்த தலைமை நீதிபதி முகோபாத்யாயா உள்ளிட்ட நீதிபதிகளையும் போலீஸார் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதி முகோபாத்யாயா அங்கிருந்து வேகமாக அகன்று தடியடியிலிருந்து தப்பினார்.
உயர்நீதிமன்ற காவல் நிலையம் முன்பு போலீஸாருக்கும், வக்கீல்களுக்கும் பெரும் மோதல் மூண்ட தகவல் அறிந்ததும் தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் முகோபாத்யாயா, நீதிபதிகள் ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன், ரகுபதி, ஜோதிமணி, சசிதரன் ஆகியோர் அங்கு விரைந்தனர்.
கைகளை மேலே உயர்த்தி ஆட்டி, யாரையும் அடிக்க வேண்டாம் என போலீஸாரிடம் கூறியபடி நீதிபதிகள் வந்தனர்.
அந்த சமயத்தில் போலீஸார் மீது வக்கீல்கள் சிலர் கற்களை வீசித் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த போலீஸார் படு வேகமாக நீதிபதிகள் மற்றும் வக்கீல்களை நோக்கி ஓடி வந்தனர்.
வருவது தலைமை நீதிபதி என்று தெரியாமல் நீதிபதிகளையும் விரட்டினர். இதையடுத்து முகோபாத்யாயா உள்ளிட்ட நீதிபதிகள் அங்கிருந்து ஓடி தப்பினர்.
ஆனால் நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் மட்டும் மாட்டிக் கொண்டார். இதில் அவருக்கு பலத்த அடிபட்டு விட்டது. அவரை அருகில் இருந்த வக்கீல்கள், இவர் நீதிபதி அடிக்காதீர்கள் என்று கூறித் தடுத்தனர்.
இதையடுத்து நீதிபதியை விட்டு விட்ட போலீஸார் அருகில் இருந்த வக்கீல்களை துரத்தி துரத்தி அடித்து விரட்டினர்.
படுகாயமடைந்த நீதிபதி ஆதித்தன் உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். பின்னர் இரவில் அவர் வீடு திரும்பினார்.
முகோபாத்யாயாவை தடுத்த வக்கீல்கள்
இந்த நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வக்கீல்களைப் பார்க்க தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்தியா நேற்று இரவு 9.30 மணியளவில் அரசு பெரிய ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருடன் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லாவும் வந்திருந்தார்.
தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஏராளமானோர் அரசு மருத்துவமனையின் 2-வது டவரின் 3-வது மாடியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களை பார்க்க லிப்ட் மூலம் தலைமை நீதிபதி சென்றார்.
லிப்டில் இருந்து வெளியே வந்த அவரை, அங்கு ஏற்கனவே கூடியிருந்த வக்கீல்கள் சூழ்ந்து கொண்டு, சிகிச்சை பெறுபவர்களை பார்க்க விடாமல் தடுத்தனர். மேலும் நீதிபதி முகோபாத்யாயாவை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை சரியில்லாததை உணர்ந்த நீதிபதி முகோபாத்யாயா அங்கிருந்து சென்று விட்டார்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications