காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வக்கீல்கள்

சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று போலீசாருடன் நடந்த மோதல் தொடர்பாக வழக்கறிஞர் சங்கத் தலைவர் பால் கனகராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் வக்கீல்கள் உள்பட சுமார் 1,200 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் வக்கீல்களை தாக்கிய போலீசாரை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டபடி ஹைகோர்ட் வளாகத்தில் ஊர்வலமாக வந்த இவர்கள் திடீரென எஸ்பிளேனடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் உயர் நீதின்றம் முன் என்.எஸ்.சி. போஸ் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. அப் பகுதியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக சட்டக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்ததால் பெரும் பதற்றம் உருவானது.
இதையடுத்து அப் பகுதியி்ல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உண்ணாவிரதம்-ஊர்வலம்:
இந் நிலையில் தமிழக பார் கவுன்சில் தலைவர் சந்திரமோகன் தலைமையில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஒரு பிரிவு வழக்கறிஞர்கள் நியாயம் கோரி கோட்டை நோக்கி பேரணியாக சென்றனர்.
அதே போல ஜார்ஜ்டவுன் கோர்ட்டு வழக்கறிஞர்கள் இன்று காலை சங்கத் தலைவர் முகம்மது கவுஸ் தலைமையில் திரண்டனர். பிறகு அவர்கள் உயர் நீதிமன்றம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். சுப்பிரமணியம் சுவாமி மற்றும் போலீசாரை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர்.
இந்த ஊர்வலம் காரணமாக ராஜாஜி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேடிக்கை பார்க்க வந்த மக்கள்:
இதற்கிடையே ஏராளமான பொதுமக்கள் மோதல் நடந்த உயர்நீதிமன்ற வளாகத்தை வேடிக்கை பார்க்க இன்று வந்தவண்ணம் இருந்தனர்.
காவல் நிலையம் இடம் மாற்றம்:
இதற்கிடையே உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட காவல் நிலையம் தற்காலிகமாக எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
எரிக்கப்பட்ட காவல் நிலையத்தில் இப்போது மிஞ்சியிருப்பது சுவர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதை சீரமைக்க சில மாதங்கள் ஆகலாம்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications