மணமகனுக்கு மயக்க ஊசி - முதலிரவில் பணத்துடன் தப்பிய மணப்பெண்
தூத்துக்குடி: முதலிரவில் மணமகனுக்கு மயக்க ஊசி போட்டு அவரின் 5 பவுன் தங்க நகை, பணம், செல்போன் ஆகியவற்றுடன் கம்பி நீட்டிய மோசடி மணமகளை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள சிவலூரை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி. கூலிதொழிலாளி. கடந்த 3 மாதங்களுக்கு முன் பாவூர்சத்திரத்தை சேர்ந்த புரோக்கர் அருணாசலம் என்பவர் செந்தூர்பாண்டியனை அணுகி நாகர்கோவிலில் ஒரு பெண் இருப்பதாகவும், அவரை 2வது திருமணம் செய்தால் உங்களுக்கு சொத்துக்கள் கிடைக்கும் என்றும் கூறினார்.
இதையடுத்து செந்தூர்பாண்டியனுக்கும் நாகர்கோவிலை சேர்ந்த வள்ளி என்ற பெண்ணுக்கும் 16-11-2008 அன்று திருமணம் நடந்தது. செந்தூர்பாண்டிக்கு காலில் புண் இருந்ததால் அதை குணப்படுத்துவதாக கூறி முதலிரவின் போது வள்ளி தூக்க மருத்தை ஊசிமூலம் ஏற்றியுள்ளார்.
சிறிது நேரத்தில் அவர் தூங்கி விடவே வள்ளி, அவரிடம் இருந்த 5 பவுன் தங்க நகை, செல்போன், பட்டுசேலை, ரூ.1500 ஆகியவற்றை தெரியாமல் எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டார். காலையில் செந்தூர்பாண்டியிடம் நாகர்கோவிலில் இருக்கும் தனக்கு சொந்தமான நகை, பணத்தை எடுத்து வரலாம் என்று கூறி வள்ளி அழைத்து சென்ள்ளார்.
புரோக்கர் அருணாச்சலம் உள்பட மூன்று பேரும் பஸ்சில் நெல்லை வந்தனர். புதிய பஸ் நிலையத்தில் செந்தூர்பாண்டியை விட்டுவிட்டு வள்ளி, அருணாசலம் இருவரும் நகை, பணத்துடன் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து செந்தூர்பாண்டி சாயர்புரம் போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையி்ல் ஏரல் அருகே பெருங்குளத்தில் உறவினர் தங்கியிருந்த வள்ளியை நேற்று முன்தினம் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். வள்ளிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள புரோக்கர் அருணாசலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications