நெல்லை போலீஸ் கமிஷனர் முன் சீமான் 'சரண்'!

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதமிருந்த புதுச்சேரி மருத்துவக் கல்லூரி மாணவர்களிடையே, இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சீமான் பேசினார் என்று காங்கிரஸ்காரர்கள் கொடுத்த புகாரின் பேரில் புதுவை போலீசார் சீ்மான் மீது வழக்குப் பதிவு செய்ததிருந்தனர்.
அவரைக் கைது செய்ய புதுவையிலிருந்து தனிப்படைப் போலீசார் சென்னை விரைந்தனர். ஆனால் சீமான் அவர்களிடம் பிடிபடாமல், ஈழத் தமிழர் ஆதரவுக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி வந்தார்.
நேற்று முன்தினம் நெல்லையில் வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பேசிய சீமான், போலீசார் கண் முன்னாலேயே மாயமானார். கடந்த இரு தினங்களாக அவரை போலீசார் தேடி வந்தனர்.
சில பணிகளை முடிக்க வேண்டியிருப்பதால் தான் சரணடையவில்லை என்றும், நீதிமன்றத்தில் நானே சரணடைவேன் என்றும் நேற்று சீமான் கூறியிருந்தார்.
இதற்கிடையே காங்கிரசார் இப்பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பியதால், சீமானைப் பிடிக்க 5 தனிப்படைப் போலீஸார் அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
இந் நிலையில் இன்று நெல்லையில் நீதிமன்றத்தில் சீமான் சரணடையச் சென்றார்.
அப்போது அவரை போலீசார் வழிமறித்துக் கைது செய்தனர். பின்னர் நெல்லை மாநகர் காவல் ஆணாயர் முன்பாக சீமான் சரணடைந்ததாக அறிவித்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சீமான் பின்னர் புதுச்சேரி போலீசாரிடம் ஒப்படைக்கப்படலாம் என்று தெரிகிறது.
அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு காங்கிரசார் கோரிக்கை எழுப்பி வருவது கவனிக்கத்தக்கது.
உயர்நீதிமன்றத்தில் சீமான் முன்ஜாமீன் மனு:
முன்னதாக புதுச்சேரி போலீஸார் தன் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதால், முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி டி.சுதந்திரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை வரும் 26ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications