நாங்குநேரி அருகே 5 வயது சிறுமி நரபலி?
நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே 5 வயது சிறுமி கொடூரமாக கொல்லப்பட்டு உரக்குழியில் புதைக்கப்பட்டார். இது நரபலியாக இருக்குமோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.
நாங்குநேரி அருகேயுள்ள ஸ்ரீரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் சேகர். மீன்பிடி தொழில் செய்து வந்த இவருக்கு 7 குழந்தைகள் உள்ளனர். இவரது 5வது குழந்தை நம்பி செல்வம்.
கடந்த 15ம் தேதி மாலை வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி நம்பி செல்வம் திடீரென்று காணாமல் போனார். இதுகுறித்து சேகர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார்.
பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் நேற்று பகலில் ஊர் அருகே உள்ள உரக்குழி ஒன்றில் அழுகிய நிலையில் சிறுமியின் உடல் கிடந்தது. அவளது கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டிருந்தது. இடது காலும் சிதைக்கப்பட்டிருந்தது.
உடலை நாய்கள் தின்று கொண்டிருந்தன. இதையடுத்து செல்வத்தின் அக்காள் பார்த்து வந்து தனது தந்தையிடம் கூறினார்.
தகவல் அறிந்ததும் நாங்குநேரி டிஎஸ்பி சிதம்பரநாதன், இன்ஸ்பெக்டர் நல்லகண்ணு, மற்றும் போலீசார் ச்ம்பவ இடத்தி்ற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
சிறுமி நம்பி செல்வத்தை யாராவது கடத்தி சென்று கொலை செய்து உடலை உரக்குழியில் வீசியிருக்கலாம் என்று தெரிகிறது. நரபலிக்காக குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
எனினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications