கஞ்சா வாங்கித் தராத நண்பரைக் கொன்ற இளைஞர்!
மதுரை: மதுரையில் கஞ்சா வாங்கித் தராததால் ஆத்திரமடைந்த இளைஞர், தனது நண்பரை கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.
மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ளது ஆழ்வார்புரம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அருண்குமார் (18) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (27). இருவரும் நண்பர்கள்.
இருவருக்கும் வெகு நாட்களாக கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், தனக்கு கஞ்சா வாங்கித் தருமாறு அருண்குமாரிடம் ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன் குஸ்தி பொட்டல் காடு என்ற பகுதியில் அருண்குமார் இருப்பதை அறிந்து அங்கு சென்று அவர் தலை மீது கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார்.
தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ராதாகிருஷ்ணனின் பைக்கை அடித்து நெறுக்கினர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராதாகிருஷ்ணனை வலை வீசி தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications