போர் நிறுத்தம்-புலிகள் தயார்; இலங்கை நிராகரிப்பு

உலக நாடுகளி்ன் கோரிக்கையை ஏற்று இந்த போர் நிறுத்தத்துக்கு முன் வருவதாக புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களி்ன் நிலையை கருத்தில் கொண்டு இந்த போர் நிறுத்தத்துக்கு முன் வருகிறோம்.
இந்தப் போர் நிறுத்தம் மூலம் அமைதிப் பேச்சுகள் தொடங்க வேண்டும், இதையடுத்து இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ஏற்படும் நிலை உருவாக வேண்டும்.
21ம் நூற்றாண்டின் மாபெரும் இன அழிப்புப் போரை தமிழர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஏபற்பட்டால், சர்வதேச சமுதாயம் இந்தத் தீ்ர்வை உறுதி செய்தால் மட்டுமே எங்களால் ஆயுதங்களைக் கீழே போட முடியும். அதுவரை தமிழர்களுக்கு உள்ள ஒரே பாதுகாப்பு எங்களிடம் உள்ள ஆயுதங்கள் தான் என்று கூறியுள்ளார் நடேசன்.
இலங்கை நிராகரிப்பு:
ஆனால், விடுதலை புலிகளின் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசு கூறிவிட்டது. இலங்கை வெளியுறவு செயலாளர் பலிதா கோஹனா கூறுகையில், விடுதலை புலிகளின் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
அவர்கள் தங்களது முக்கிய தலைவர்களை காப்பாற்றுவதற்காக இவ்வாறு தெரிவித்துள்ளனர். விடுதலை புலிகள் எந்த நிபந்தனையுமின்றி முற்றிலுமாக சரணடைந்தால் மட்டுமே அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும் என்றார் கோஹனா.
இதற்கிடையே அப்பாவி மக்களை ராணுவம் கண்மூடித்தனமாக கொன்று குவித்து வருவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் கூறியுள்ளது.
அதன் சர்வதேச இயக்குனர் ஜேம்ஸ் ராஸ் கூறுகையில், பாதுகாப்பான பகுதி என்று இலங்கை அரசு கூறும் பகுதிகளிலும் ராணுவம் தாக்கிதல் நடத்தி மக்களை கொன்று குவித்து வருகிறது. மருத்துவமனைகளக் கூட ராணுவம் விட்டு வைக்காமல் தாக்கி வருகிறது என்றார்.
இலங்கைக்கு மனித உரிமைகள் அமைப்பு கண்டனம்:
இதற்கிடையே அப்பாவி மக்களை ராணுவம் கண்மூடித்தனமாக கொன்று குவித்து வருவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் கூறியுள்ளது.
அதன் சர்வதேச இயக்குனர் ஜேம்ஸ் ராஸ் கூறுகையில், பாதுகாப்பான பகுதி என்று இலங்கை அரசு கூறும் பகுதிகளிலும் ராணுவம் தாக்கிதல் நடத்தி மக்களை கொன்று குவித்து வருகிறது. மருத்துவமனைகளக் கூட ராணுவம் விட்டு வைக்காமல் தாக்கி வருகிறது என்றார்.
ஜப்பான் முயற்சி:
இதற்கிடையே வன்னியில் இரு தரப்புக்கும் இடையே சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை அங்கிருந்து வெளியேற்ற ஜப்பான் தலைமையிலான நாடுகள் முயற்சி்கள் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக இலங்கை அரசு மற்றும் புலிகளுடன் இந்த நாடுகள் பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளன.
பிரபாகரன் குடும்பத்தினர் வெளியேறினர்?
இதற்கிடையே விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினர் கடல் வழியாக வெளியேறிவிட்டதாக இலங்கை பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் தாக்குதல் நடத்த சென்ற இடத்தில் இலங்கை ராணுவத்திடம் பிடிபட்ட கரும்புலி ஒருவர் சில முக்கிய தகவல்களை கொடுத்துள்ளதாக இந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
அதில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி, இரண்டாவது மகன் பாலச்சந்திரன், மகள் தூவரகர்ணம் ஆகியோர் கடல் மார்க்கமாக வெளியேறிவிட்டனர்.
ஆனால், பிரபாகரனும் அவரது மூத்த மகன் சார்லஸ் அந்தோணியும் முல்லைத் தீவில் ராணுவத்துக்கு எதிராக போராடி வருவதாகத் தெரிவித்துள்ளது.
சிங்கள ராணுவத்திடம் பிடிபட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையை சேர்ந்த ஒருவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளதாக அந்தப் பத்திரிக்கை கூறுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications