ரஹ்மான்: தமிழகத்தில் உற்சாகம்-கொண்டாட்டம்!!
சென்னை: ரஹ்மான் விருதை வென்றதையடுத்து சென்னையில் உள்ள ரஹ்மானின் வீட்டில் பெரும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. அவரது வீட்டில் குவிந்துள்ள ரசிகர்களும் உறவினர்களும் நண்பர்களும் கேக் வெட்டி ஆடிப் பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவரது வீட்டின் வெளியில் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.
ரஹ்மானின் தங்கை ரெஹனா கூறுகையில், இந்த விருதை கடவுளுக்கு அர்ப்பணிக்கிறோம் என்றார்.
விருது அறிவிக்கப்பட்ட பின் ரஹ்மான் வீட்டை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டுள்ளனர். பட்டாசுகள் வெடித்தும் ரஹ்மானை வாழ்த்தியும் கோஷமிட்டபடி உள்ளனர். கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர்.
ரஹ்மானுடன் அவரது தாயாரும் அமெரிக்கா சென்றுள்ளார்.
பிரதமர் வாழ்த்து:
ஆஸ்கர் நாயகன் ரஹ்மானுக்கு, உலக அளவில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, தமிழக முதல்வர் கருணாநிதி உள்பட இந்தியத் தலைவர்கள் அனைவரும் ரஹ்மானுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications