பஸ் அதிபர் வீட்டில் ரூ 10 லட்சம் கொள்ளை!
சீர்காழி: சீர்காழி பஸ் அதிபர் வீட்டில் ரூ 10 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார தனிபடை அமைத்து தேடி வருகின்றனர்.
நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ளது தென்பாதி திரிபுரசுந்தரி நகர். இங்கு வசிப்பவர் உதயசந்திரன் (52). பஸ் அதிபர்.
இவர் கட்ந்த 21 ம் தேதி தனது குடும்பத்துடன் சென்னை சென்றார்.
இவரது வீட்டை ஈஸ்வரி என்பவர் தினமும் சுத்தம் செய்து வருவார். வழக்கம் போல் சம்பவத்தன்றும் ஈஸ்வரி வீட்டை சுத்தம் செய்தார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்து தெரியவந்தது. இதனையடுத்து ஈஸ்வரி உதயசந்திரனுக்கும், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உதயசந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த வைர நெக்லஸ் மற்றும் 75 பவுன் நகைகள் மற்றும் ரூ 95 ஆயிரம் ரொக்க பணம் என ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் காணாமல் போனதாக போலீசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை வலை வீதி தேடி வருகின்றனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications