நெல்லை: அடுத்தடுத்து விபத்துகள்-8 பேர் பலி
நெல்லை: நெல்லை அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த மூன்று விபத்துக்களில் 8 பேர் பலியாயினர்.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே செட்டிகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் கோவையில் பல பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது ஒன்றரை வயது மகள் பிரியாதர்ஷினுக்கு நெல்லை அருகேயுள்ள சிவந்திபட்டி கோயிலில் முடி காணிக்கை செலுத்துவதற்காக கோவையிலிருந்து காரில் சொந்த ஊருக்கு வந்தார்.
பின்னர் அங்கிருந்து தந்தை சங்கர் ரெட்டியார் மற்றும் குடும்பத்தினருடன் நேற்று மதியம் காரில் சிவந்திபட்டி கிளம்பினர். காரை ராஜசேகர் ஓட்டினார்.
புறப்பட்ட 5 நிமிடத்திலேயே கார் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ராஜசேகர், சங்கர் ரெட்டியார், சிறுமி பிரியாதர்ஷினி ஆகியோர் இறந்தனர்.
செட்டிகுறிச்சியை சேர்ந்த ராசையா மனைவி பெருமாள் அக்கா, ராமசாமி மனைவி மூக்கம்மாள், ராமசாமி மகன் சண்முகராஜ் ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு மானூர் போலீசார் சென்று படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு வண்ணார்பேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ராஜசேகர் மனைவி உள்பட 3 பேர் உயிர் தப்பினர். விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்ததால் செட்டிகுறிச்சி கிராமமே சோகத்தில் மூழ்கியது.
மேலும் நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலை அடுத்த பெருங்கோட்டூர் அருகே சாத்தூரிலிருந்து சங்கரன்கோவில் வந்துகொண்டிருந்த பஸ்சும், தனியார் வேனும் நேருக்கு நேர் மோதி கொண்டது.
இதில் வேன் ரோட்டரோத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் வேன் டிரைவர் சங்கரன்கோவிலை சேர்ந்த பாக்கியநாதன் மகன் ராஜா, வேனில் பயணம் செய்த புதுமனையை சேர்ந்த கோவிந்தராஜ், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த சங்கரமகாலிங்கம் மகள் அங்காளஈஸ்வரி மருத்துமனையி்ல் அனுமதிக்கப்பட்டு இறந்தாள்.
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி பொழிக்கரையை சேர்ந்த அரிராமன் என்ற விவசாயி பைக்கிள் சென்றபோது தவறி விழுந்து பலியானார். நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்துகளில் நெல்லை மாவட்டத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications