குலாம் நபி ஆசாத்துடன் தயாநிதி மாறன் திடீர் சந்திப்பு
சென்னை: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத்தை, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் டெல்லியில் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த திடீர் சந்திப்புக்கான காரணம் குறித்து இரு தரப்பும் தெரிவிக்கவில்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சந்திப்பு நீடித்தது.
முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வரான குலாம் நபி ஆசாத் கடந்த வாரம்தான் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்றார். அவரிடம் தமிழகம் உள்ளிட்ட சில முக்கிய மாநிலங்களின் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஆசாத்தை, தயாநிதி மாறன் சந்தித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடந்த வாரம்தான், திமுகவை விட்டு விட்டு காங்கிரஸ் வெளியே வர வேண்டும் என்று ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் ஜெயலலிதாவின் அழைப்பை வீரப்ப மொய்லி நிராகரித்து விட்டார். முதல்வர் கருணாநிதியும், ஜெயலலிதாவின் செயல்பாடுகள், காங்கிரஸையும், சோனியா காந்தியையும் ஜெயலலிதா எப்படியெல்லாம் இழிவுபடுத்தினார், அவமானப்படுத்தினார் என்பதை விவரித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு, ஜெயலலிதாவின் அழைப்பில் காங்கிரஸார் ஏமாந்து விடக் கூடாது என கூறியிருந்தார்.
ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர், அதிமுகவுக்கு அனுதாபிகளாக உள்ளதால், கடைசி நேரத்தில் அதிமுக பக்கம் காங்கிரஸ் போய் விடுமோ என்ற சந்தேகம் திமுக மத்தியில் உள்ளது.
இந்த நிலையில்தான் தயாநிதி மாறன் ஆசாத்தை சந்தித்துப் பேசியுள்ளார். முதல்வர் உத்தரவுப்படியே தயாநிதி மாறன், ஆசாத்தை சந்தித்துப் பேசியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆசாத், தயாநிதி மாறன் சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்த தகவலை காங்கிரஸ் வட்டாரம் வெளியிடவில்லை.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications