தமிழகம் முழுவதும் காவல்துறை அதிகாரிகள் அதிரடி மாற்றம்
சென்னை: தமிழகத்தில் உயர் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் வக்கீல்களை நோக்கி துப்பாக்கியைக் காட்டிய டிஐஜி மாற்றப்பட்டு விட்டார். வட சென்னை இணை ஆணையராக மீண்டும் ரவி திரும்பியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தவு:
- மதுரை சரக டி.ஐ.ஜி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை சி.பி.சி.ஐ.டி. விசேஷ புலனாய்வு குழுவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
- திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அமரேஷ் பூஜாரி, மதுரை சரக டி.ஐ.ஜி. பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.
- சென்னை தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி. அசோக்குமார் தாஸ், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரயில்வே டிஐஜி சிவனாண்டி
- கோவை சரக டி.ஐ.ஜி. பி.சிவனாண்டி, சென்னை ரெயில்வே டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.
- சென்னை சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. வி.ஏ.ரவிக்குமார், கோவை சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
மீண்டும் ரவி
சென்னை உயர்நீதிமன்றம் வட சென்னை இணை ஆணையரகத்தின் கீழ் வருகிறது. பெரும் கலவரம் மூண்டதன் பின்னணியில், அங்கிருந்த இணை ஆணையர் சேஷசாயி மாற்றப்பட்டு சிபிசிஐடி டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்பு வட சென்னை இணை ஆணையராக இருந்த எம்.ரவி மீண்டும் அப்பொறுப்புக்கு வருகிறார். தற்போது ரவி சென்னை நிர்வாகப் பிரிவு டிஐஜியாக உள்ளார்.
- திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வி.பாலகிருஷ்ணன், மதுரை மாவட்ட சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.
- மதுரை மாவட்ட சூப்பிரண்டு எம்.மனோகர், தென் சென்னை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
- தென் சென்னை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் கே.ஜோஷி நிர்மல்குமார், புளியந்தோப்பு துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
- புளியந்தோப்பு துணை கமிஷனர் எஸ்.பன்னீர்செல்வம், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகிறார்.
- சென்னை கொள்ளை தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு என்.கே.செந்தாமரைக்கண்ணன், சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை வணிக குற்றவியல் பிரிவு சூப்பிரண்டு எஸ்.சாந்தி, புதியதாக உருவாகியுள்ள திருப்பூர் மாவட்ட சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.
- சென்னை வணிக குற்றவியல் பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டிருந்த பி.மூர்த்தி தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications