சென்னை சென்டிரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மர்ம தொலைபேசி தகவல் வந்ததை அடுத்து போலீசார் கடும் சோதனையிட்டனர். இறுதியில் அது புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த ஒரே மாதத்தில் சென்டிரலுக்கு விடுக்கப்பட்ட இரண்டாவது தொலைபேசி வெடிகுண்டு மிரட்டல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் சுமார் 12.55 மணியளவில் ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் சென்டிரல் ரயில் நிலையத்தில் இன்னும் 10 நிமிடத்தில் வெடிகுண்டு வெடிக்கும் முடிந்தால் அதனை தடுத்து பாருங்கள் என்று கூறிவிட்டு, போனை வைத்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் சுறுசுறுப்பாக செயல்பட்டு சென்னை சென்டிரல் ரயில் நிலைய போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
சென்டிரல் ரயில் நிலைய போலீஸ் போலீசார் இரண்டு குழுவாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர், ஸ்கேன் கருவிகள் சகிதம் தீவிரகமாக பணியாற்றினர். ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் கடும் சோதனை செய்யப்பட்டனர்.
பல மணி நேர தீவிர சோதனைக்கு பின் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், அது வெறும் புரளி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மிரட்டல் விடுவிக்க பயன்படுத்தப்பட்ட தொலைபேசி அயனாவரம் வெள்ளை தெருவில் உள்ள மளிகை கடையில் உள்ள பொது தொலைபேசி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தற்போது சனிக்கிழமை வந்துள்ளது. வார விடுமுறை நாட்களை குறிவைத்து யாரோ வேண்டுமென்றே செய்கின்றனர் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications