தமிழக தலைவர்கள் தள்ளாடுகின்றனர்: இயக்குனர் வி.சி. குகநாதன்
மதுரை: தமிழகத்தில் தலைவர்கள் தடுமாறுகிறார்கள். தள்ளாடுகிறார்கள். அடிக்கடி தங்கள் நிலைபாட்டினை மாற்றிக் கொள்கிறார்கள் என்று திரைப்பட இயக்குனர் வி.சி. குகநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரம் குறித்து திரைப்பட இயக்குனர் வி.செ. குகநாதன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
தமிழகத்தில் தலைவர்கள் தடுமாறுகிறார்கள். தள்ளாடுகிறார்கள். அடிக்கடி தங்கள் நிலைபாட்டினை மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால் யாரும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு இல்லை என்று யாரும் சொன்னதில்லை. அப்படி சொன்னால் அந்த கட்சி நிச்சயமாகத் தமிழ்நாட்டில் அரசியல் பண்ணமுடியாது.
தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளால் தான் தமிழ் ஈழம் கிடைக்கும் வாய்ப்பு முதல் தடவையாக நழுவிப்போனது. இல்லையெனில் இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர் காலகட்டத்திலேயே அது நிறைவேறியிருக்கும்.
மத்தியில் கூட்டணியில் இருக்கும் தமிழினத்தலைவர் கலைஞர் அவர்கள் மனது வைத்தால் ஈழத்தமிழர்களுக்கு விடியல் கிடைக்கும் என உலக தமிழினம் நம்புகிறது.
தற்போது ஈழத்தில் தமிழ் இனம் பூண்டோடு அழிக்கப்படுகிறது. உலகுக்கு இந்த உண்மை தெரியும். இருபத்தியிரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் இனம் தமது உரிமைகளைப் பாராளுமன்றத்தில் பேசி பெற முடியாத நிலை உள்ளது.
ஆனால் பக்கத்து நாடான இந்தியா தீர்க்கமான முடிவை எடுக்காமல் உள்ளதாலும், போராளிகளையும் தமிழர்களையும் பிரித்துக்காட்டி குழப்பத்தை ஏற்படுத்துவது இவை எல்லாம் மற்ற நாடுகள் ஆதரவு தெரிவிக்க அஞ்சும் நிலையை ஏற்படுத்தி உள்ளது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications