மகளின் காதல் தோல்வியால் மனமுடைந்த தந்தை தற்கொலை
சுரண்டை: நெல்லை மாவட்டம் கீழசுரண்டையில் மகளின் காதல் தோல்வியால் மனமுடைந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
நெல்லை மாவட்டம் கீழசுரண்டை காமராஜ் நகரை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் கான்ட்ராக்டராக பணியாற்றி வருகிறார். இவர் மகள் கீதா. பீடி சுற்றி வருகிறார். கீதாவுக்கும் அதே தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளியான முத்தையா மகன் ராஜேந்திரன் என்பவரும் கடந்த இரண்டு வருடமாக பழகி வந்தனர்.
இந்நிலையில் ராஜேந்திரனுக்கு அவரது பெற்றோர் உறவுக்கார பெண்ணை பார்த்து முடிவு செய்துள்ளனர். இதையறிந்த கீதா, ராஜேந்திரனிடம் தன்னை விட்டு வேறொரு பெண்ணை எப்படி திருமணம் செய்ய சம்மதிக்கலாம் என்று சத்தம் போட்டுள்ளார்.
ஆனால் ராஜேந்திரன் நான் உன்னுடன் நட்பாகதான் பழகினேன். உன்னை காதலிக்கவில்லை என்று கூறி மறுத்து விட்டார்.
இதுகுறித்து கீதா தனது தந்தையுடன் சென்று சுரண்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் ராஜேந்திரன் மற்றும் அவரது பெற்றோரை வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போதும் ராஜேந்திரன் தான் கீதாவை காதலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மகளின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என மனமுடைந்த தங்கராஜ் இன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications